Thursday, April 8, 2010

மீதமுள்ள

மீதமுள்ள கடிதங்களை படிப்பதற்குள்
கண்களில் கண்ணீர் ததும்புகிறது.
இறந்த காலத்தை எண்ணுவதற்கு மாறாக
ஏதாவது படிக்கலாம்
ஏதாவது எழுதலாம்.

ஆனால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சேராத
பொன் காலத்தை எண்ணச் சொல்கிறது இதயம்.
இதயம் சொல்வதை செய்பவன் முட்டாளா?
மதி சொல்வதை செய்பவன் அறிவாளியா?
இதயமா? மதியா? என்று சண்டையிடுவதற்குள் கைகள்
க்டிதங்களை பற்றிக்கொண்டன.
இதை செய்திருக்கக்கூடாது என்று எண்ணிய தருணம்
க்ண்கள் நீ எழுதிய கடிதங்களை வாசித்தன.
அதை படித்த வ்ண்ணம் மெய் சிலிர்த்து நின்றேன்.

சில சமயங்களில் வாயில் நூழையாத சொற்கள்
பூவுக்கும் மரத்துக்கும் இடையே துள்ளி பறக்கும்
பட்டாம்பூச்சியைப் போல் பறந்து செல்கின்றன.
சில நேரங்களில் மனம் பேசுவதற்குள்
மதி பேசுகிறது....
அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது
நீங்கள் போட்ட நாடகம்
வெளிச்சத்தில் காட்டப்படுகிறது.

ஆனால், மாயமாக
என்றும் சேராத கரைகள்போல்
சிக்கித் துடித்துக்கொண்டிருக்கின்றன
என் மீதமுள்ள சொற்கள்.

1 comment:

  1. என்றும் சேராத கரைகள் போல் சிக்கித் தவிக்கும் மீதமுள்ள சொற்கள்...எங்கும் போய்விடாது.

    அவை, கவிதை நதிக்கரையோரம் அர்த்தமுள்ள பூக்களாய் வருடங்களில் மலர்ந்திருக்கும்!

    அந்தப் பூக்களில் உன் பெயர் இருக்கும். All you need to do is 2 things - Keep reading poems & Keep writing poems!

    ReplyDelete