Tuesday, December 7, 2010

சக்தி

நிஜத்தை மறக்க எத்தனை சொப்பனங்கள் மனதிலே
வானம் வசப்பட காத்து காத்து நம்பிக்கை பறக்கிறது காற்றிலே
நம்பி எனக்கு கை கொடு லட்ஷ்மியே
உன் கையில் இருப்பது பூலோகத்தின் அனைத்து சக்தியே
நீ என்னுள் வசிக்கிறாய் என்பதை காட்டு
உன் அரமணைக்கு என்னை மாற்று..

Tuesday, July 6, 2010

கடிகாரம்

திடீர்ரென்று ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தாள், பாரதி. எவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள், இந்நாள் வருவதற்கு. இன்னும் சிறிது நேரம் படுத்து, பின் எழுந்திருப்போமே என்று எண்ணி மறுபடியும் படுத்தாள். அவளுடைய இமைகள் மூடுவதற்குள், அவள் இன்று செய்ய வேண்டிய வேலைகள் அவள் மனத்திரையில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தன, எதோ ஒரு பள்ளிக்கு அட்மிஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்றுக்கொண்டிருப்பதுப் போலவே. திடிக்கிட்டு எழுந்தாள், 'தலைக்கு மேல் வேலை இருக்குது, இதில் தூக்கத்திற்கு எது நேரம்?', என்று அவளுக்குள் இருந்த கடிகாரம் ஒன்று ஒலித்த்து.ஒவ்வொருவரிடமும் ஒரு கடிகாரம் உண்டு. ஓரு மனிதனின் ஒவ்வொரு பழுவத்திலும் சாதிக்க வேண்டியவை இருந்தன. இருபத்திரண்டு வயதிற்குள் ஒரு வேலை , முப்பது வ்யதிற்குள் சமூகத்தில் நமக்கென்ற ஒரு இடம். இது இல்லவிட்டால் வாழ்வு மூற்று பெராது என்ற பார்வை இல்லை இல்லை, சட்டம். இச்சட்டத்தை மீறுபவர்கள் சமூகம் என்ற நீதிபதியின் பார்வையில் ஒரு குற்றவாளி. சொம்பல் என்ற குற்றத்தை புரிந்த்தற்காக் குற்றவாளி என்று கருதப்படுவர்.

ஜன்னலிலிருந்து வந்த வெளிச்சத்தை பார்த்த பிறகு தன்னை அறியாமலே பாரதிக்கு ஒரு தெளிவு எற்ப்பட்டது. ஒரு புது நாள், புது வாய்ப்பு என்பத்ற்கு இந்த காலை நேரம் ஒரு அடையாலமாக இருந்தது. அம்மா இன்னும் தாங்கிக்கொண்டிருந்தாள். 'அது எப்படி அம்மா, முகத்தை கழுவாமல் கூட உன் முகம் பளீச்சென்று இருக்குது' என்ற கேள்வி பாரதியின் மனதிற்குள் எழுந்த்து. அம்மாவை எழுப்ப விழுப்பம் இல்லாமல்,சமையலறைக்கு சென்று பசியாறினாள். காய்ந்துபோன ரொட்டியை மெல்லுவதற்குள் வாய் வலித்தது. மாத பத்திரிக்கைளை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வனித்தாவைப் பற்றினான ஞாபகம் பாரதிக்கு ஏற்ப்பட்டது. இன்று வனித்தாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு விழுது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. பெரியம்மாவின் மகள் வனித்தாவிற்கு இருபத்தெட்டு வயது, பாரதியை விட பன்னிரெண்டு வயது மூத்தவள். இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் பேசுவதற்கான விஷயங்கள் குறைவதே இல்லை.

'பாரதி வா, விழுதுக்கு தயாராக வேண்டும்' என்று அம்மா கூவினாள். தாயாரகிவிட்டு இருவரும் பெரியம்மாவின் இல்லத்திற்குச் சென்றனர். வீட்டை அடைந்தவுடன் பாரதி வனித்தாவின் அறைக்கு விரைந்தாள்.'ஹாய் பாப்பா', என்றுச் செல்லமாக கூறியப்படியே வனித்தா பாரதியை அனைத்தாள். 'அக்கா உன்க்கு இருபத்தெட்டு வயதாகிவிட்டது! கண்மூடி திறப்பதற்குள் கிழவியா மாறிடபோறே! 'என்று கேலியாக சீண்டினாள் பாரதி. 'ஹ்ம்.....இருபதெட்டு வயதானாலும் என்ன சாத்திருக்கிறேன்.மூனு வருஷமா நிறுவனத்துல குப்பைக்கொட்டுரேன். ஆனால் சம்பளம் ஒரு காசுக்கூட உயர்ந்த பாட்டில்லை. இந்த லட்சணத்தில் எப்படி வீடு வாசல், வாகனம் ஆறு மாசத்திற்கு ஒருத்தடவை வெளியுர் டுவர்? நினச்சாலே தலைச்சுத்துது', என்றவுடன் வனித்த பெருமூச்சு விட்டாள்.'அக்கா எனக்கும் ச்கால்ர்ஷிப் வேணும். ஆனால் இப்போது எனக்கு கிடைக்குற மதிப்பெண்களைப் பார்க்கும் போது, கஷ்ட்ம் தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருக்கும் வரையறைகளைப் பற்றிப் பேச வேண்டாமே' என்றாள் பாரதி தனக்குள். 'வா அக்கா, அம்மா பிரியானியை ஒரு கைப்பிடிப்போமா'என்றாள் பாரதி. மாமாவின் பேத்தி ப்ரியா தன் வீட்டுப் பாடத்தைப் பற்றி புலம்பிக்கொண்டு இருந்தாள். 'பாரும்மா உன் அக்காவெல்லாம் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கிறாங்க. நீ என்ன ஆகப்பொறே?' என்று வினாவினார் மாமா. 'ஆஆ.... மருத்துவர்', என்று ஒரு கணம் யோசிக்காமலே யாரோ சொல்லிக்கொடுத்துப் போலவே கூறினாள்.'சீக்கிறம் சாப்பிடு மூணு மணிக்கு பாட்டுக் களாஸ் இருக்கு' என்றார் மாமா. பாரதியும் வனித்தவும் சிரித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டனர்.இன்னொருவரின் கடிகாரம் ஒடத்தொடங்கியது, ஆறு வயது நிறம்புவதற்குள்ளேயே...

Monday, May 10, 2010

என் அருகில் இருந்துக்கொண்டே
















This was written for Mothers day (9th May 2010)


என் அருகில் இருந்துக்கொண்டே


தியாகி என்றோ,
கடவுள் என்றோ
அதற்கும் மேலே என்றோ
இவ்வுலகம் முழுவதும் உனக்கு பெயர் உண்டு
ஆனால் அம்மா
நீ எனக்கு
என் இரு கைகள் போல!
கைகொடுப்பாய்
என் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்துக்கொண்டே

உன் அருகில் இருந்துக்கொண்டே
பசி தூக்கம் மறந்து
உன் மடியில் படுத்து
விடிகிறன என்னுடைய
குழந்தை பருவத்தின் காலைகள்
இனியும் விடியும்
இதற்கு பிறகு வரக்கூடிய
இனிய பருவத்தின் காலைகளும்

Sunday, May 2, 2010

இதயம்

இரண்டு இதயம் தருவாயா
என் சொகங்களை ஒன்றில் பூட்ட
என் மகிழ்ச்சியை ஒன்றில் ஊட்ட
இரு இதயம் தந்தால்
புயலிலும் விளையாடுவேன்
அத்தைரியத்துடன்
மனதை அலைபாய விடுவேனே
இன்னொரு இதயம் என்னை தாங்கிக்கொள்ளும் என்ற
ஆதங்கத்தில் வாழ்க்கையைப் பார்த்து
அஞ்சி ஒளியமாட்டேன் மாறாதது
இரு இதயங்கள் இருக்கிறதென்ற அலட்சியத்தில்
ஒரு இதயம் படும் வேதனை
இரு இதயம் இருந்திருந்தால் இரு மடங்கு கூடதா?
இதற்கு பதில் கூறுவதற்கு யாரும் வருவதுன்டா?

Thursday, April 8, 2010

மீதமுள்ள

மீதமுள்ள கடிதங்களை படிப்பதற்குள்
கண்களில் கண்ணீர் ததும்புகிறது.
இறந்த காலத்தை எண்ணுவதற்கு மாறாக
ஏதாவது படிக்கலாம்
ஏதாவது எழுதலாம்.

ஆனால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சேராத
பொன் காலத்தை எண்ணச் சொல்கிறது இதயம்.
இதயம் சொல்வதை செய்பவன் முட்டாளா?
மதி சொல்வதை செய்பவன் அறிவாளியா?
இதயமா? மதியா? என்று சண்டையிடுவதற்குள் கைகள்
க்டிதங்களை பற்றிக்கொண்டன.
இதை செய்திருக்கக்கூடாது என்று எண்ணிய தருணம்
க்ண்கள் நீ எழுதிய கடிதங்களை வாசித்தன.
அதை படித்த வ்ண்ணம் மெய் சிலிர்த்து நின்றேன்.

சில சமயங்களில் வாயில் நூழையாத சொற்கள்
பூவுக்கும் மரத்துக்கும் இடையே துள்ளி பறக்கும்
பட்டாம்பூச்சியைப் போல் பறந்து செல்கின்றன.
சில நேரங்களில் மனம் பேசுவதற்குள்
மதி பேசுகிறது....
அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது
நீங்கள் போட்ட நாடகம்
வெளிச்சத்தில் காட்டப்படுகிறது.

ஆனால், மாயமாக
என்றும் சேராத கரைகள்போல்
சிக்கித் துடித்துக்கொண்டிருக்கின்றன
என் மீதமுள்ள சொற்கள்.

Sunday, April 4, 2010

வீடு

கதவை ஒருமுறை தட்டினான். மீண்டும் மீண்டும் கைவலிக்கும் வரை தட்டினான். உடலை சுட்டரிக்கும் ஜுன் மாத வையிலில் தன்னை வாசப்படியில் நிற்க வைத்த அவன் அம்மாவை பார்த்து முறைத்தான் இந்த கொடுமையான வெயிலில் அவனை நிற்க வைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது. மீண்டும் கதவை தட்டினான். 'ஏன் சாகர் கதவை தட்டிகிட்டை இருக்கிறாய் .உனக்கு கொஞ்சம் கூட பொருமையே இல்லை. சரி வா', என்று அவனை அலட்சியமாக வீட்டினுள் வரவேற்றாள், லட்சமி. வீட்டினுள் செல்ல அவனுக்கு ஏற்பட்ட துடிப்பு எதனால் விளைந்தது என்பதை அவனால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வீட்டின் உள்ளே சென்றவுடன் ஒரு செளகரியமான இடத்தை அடைந்ததுப்போல் ஒர் உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அளவிடமுடியாத மகிழ்ச்சி சொல்லி புரியவைக்க முடையத சந்தோஷம் அவனுக்கு ஏற்பட்டது. இவனை வளர்த்த வீட்டைக் கவனித்தான். அதில் அடைங்கியுள்ள ஒவ்வொரு இடமும் தன் கதையை கவிதைப் போல் அவனுக்கு நினைவுட்டி மகிழ்ந்தன. திருட்டுத்தனமாக தன் அண்ணனுடனும் தங்கையுடனும் நல்லிரவில் பேய் படம் பார்த்தது, 'சொபாவில் அழுது அழுது கண்ணம் சிவக்க அங்கேயே தூங்விட்ட நினைவுகள் அவன் மனத்திரையில் போடிப்போட்டுக்கொண்டு மறு ஒலிபரப்பகின.வாழ்வில் சலித்து போகாதது வீடு மட்டுமே என்று தனக்குள் எண்ணினான். அது உண்மைதானே, வேளை, வேலை, பொழுதுப்போக்கு , பணம் இவை எல்லாம் எதோ ஒரு வகையில் சலித்து போகக்கூடியவை தானே.கைகால் கருவிக்கொண்டு சாப்பிட தாயரானான். சாப்பிடும் போது அவனால் தன் அம்மா கூறுவதைக் கவனிக்க முடியவில்லை. அவன் கவனம் எங்கோ மிதந்துக் கொண்டிருந்தது. அவன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த படங்களை கவனித்தான். எல்லாப்படகளும் அவன் அண்ணன் வரைந்தவைதான். அண்ணன் பல்கழைகழகத்தில் ஒவியம் வரையும் வகுப்பில் இருந்தான் சாகரின் அப்பாகூட சின்ன வயதில் ஒவியம் வரைந்தவர் தான்.ஆனால் ஏனோ அதை அவர் தொழிலாக மாற்றிக்கொல்லவில்லை. ஒவியங்களில் புரியாத முகங்களின் அசைவுகள் வரையப்பட்டிருந்தன.புரியாத பிம்பங்களில் கலை ரசனை எப்படி அடங்கியுள்ளது? 'மோடர்ன் அர்ட்' என்று புரியாத கிறுக்குகளுக்கு வண்ணம் பூசி அவற்றிற்கு உயிர் ஊட்டியிருந்த அண்ணன், சாகரின் கன்னுக்கு முட்டளாய் தோன்றினான். அனால் உண்மையில்லை சாகர் தன் அண்ணனைப் பார்த்து பொராமைக் கொண்டான். ஒவியங்களை கண்டு ரசித்தகண்கள் ஏன் நல்ல காற்ப்பந்து வீரரை போற்ற மறுத்தது? தீடீர்ரென்று அம்மவைப் பார்த்து, 'அம்மா உனக்கு என்னைப் பிடிக்குமா,அண்ணனை பிடிக்குமா?' என்று அரைகிண்டலுடன் கேட்டான். உன் அண்ணன் வீட்டை தாங்கி நிற்கும் கம்பிகள் போல முதலில் வந்தவன். நீ வீட்டை பலப்படுத்தி நிற்கும் செங்கல் போன்றவன். இருவரும் இல்லாமல் இந்த வீடா?' என்று விளக்கினார் அம்மா.சாகருக்கு புரிந்தும் புரியததுப்போல் இருந்தது. ஆனால் அவன் மனம் லேசானது.

இன்று முதல்....

என் மனதின் பிரதபளிப்புகள் இக்கண்ணாடி முன்பு சமர்பிக்கிறேன்.
எதார்த்தம், கற்பனை மிகுந்த உலகில் என் முதல் பதிவு ,முதல் சந்திப்பு.